வீணாகும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் தங்கம்!: உணராவிட்டால் சென்னை நிலை வரும்!

தினமலர்  தினமலர்
வீணாகும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் தங்கம்!: உணராவிட்டால் சென்னை நிலை வரும்!

கோவை:-தண்ணீர் தானே என நினைக்காதீங்க... ஒவ்வொரு சொட்டும் தங்கத்துக்கு நிகரானது என்பதை இயற்கை நமக்கு உணர்த்த ஆரம்பித்திருக்கிறது. பருவ மழை பொய்த்துப் போனால், சென்னையை போன்ற நிலைமை, கோவைக்கும் ஏற்படும். அதனால் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும்.
காணுமிடமெல்லாம் மரக்கன்றுகளை நட வேண்டும்.கோவை நகர்ப்பகுதியில், 18.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பணி நிமித்தமாக, நாளொன்றுக்கு, 2 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் தாகத்தை தணிக்க, தேவையான தண்ணீர் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், மாநகராட்சி இருக்கிறது.
ஒரு நாளைக்கு, 26.57 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. கோடை மழை பொய்த்த காரணத்தால், அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. சிறுவாணியில் குறைந்த பட்ச இருப்புக்கு கீழாக செல்லக்கூடிய அபாய நிலை ஏற்பட்டது.தற்போதுள்ள சூழலில், 16 முதல், 17 கோடி லிட்டர் தண்ணீரே, அணைகளில் இருந்து எடுக்க முடிகிறது; நாளொன்றுக்கு, 10 கோடி லிட்டர் குறைவாக எடுப்பதால், தட்டுப்பாடு உருவாகி இருக்கிறது.அச்சமான சூழல்சிறுவாணி அணையே, கோவைக்கு மிக பிரதான குடிநீர் ஆதாரம். அதிலும் கூட, 2012 மற்றும், 2016ல் நீர் மட்டம் கீழிறங்கியது. குறைந்தபட்ச இருப்புக்கு கீழ் தேங்கியிருந்த தண்ணீரை எடுத்து பயன்படுத்தினோம்.
2017, ஜன., மாதம், சிறுவாணியில் நீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. கேரள அரசுடன் பேச்சு நடத்தி, ஒரு மாதம் தாமதத்துக்கு பின், பிப்., மாதமே, மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்க, அனுமதி கிடைத்தது.இப்போது அத்தகைய சூழல் திரும்பவும் வந்து விடுமோ என்கிற அச்ச உணர்வு தொற்ற ஆரம்பித்திருக்கிறது.
ஏனெனில், இப்போதே குறைந்தபட்ச இருப்பை தொட்டு விட்டோம். பருவ மழை பொய்த்து விட்டால், விலங்கினங்களுக்காக தேக்கி வைக்கப்படும் தண்ணீரை எடுத்துதான் பயன்படுத்த வேண்டிய அவலம் ஏற்படும். நகர்ப்புறங்களில் உள்ள குளங்களில், ஓரளவு தண்ணீர் தேங்கியிருப்பதால், 'போர்வெல்' வற்றாமல் இருக்கிறது.
மாநகராட்சி பராமரிப்பில் உள்ள, 2,042 'போர்வெல்'களும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரு நாட்களுக்கு ஒருமுறை சப்பை தண்ணீர் வழங்குவதால், தட்டுப்பாடு இல்லாமல் பயணிக்க முடிகிறது.மாசில்லா கோவைபோர்வெல்லில் நீர் மட்டம் சரிய ஆரம்பித்தால், லாரி தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்; குடிநீர் தேவைக்கு கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டும். எனவே, மழை நீரை சேமிக்க ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லமாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்; கிடைக்கும் நீரை பாதுகாப்பாக தேக்க வேண்டும்; சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடாது.
பருவம் தவறாமல் மழையை வரவழைக்க, காலியிடங்களில் மரங்கள் வளர்க்க வேண்டும்; பசுஞ்சோலையாக நகரை மாற்ற வேண்டும்; மாசில்லா கோவை உருவாக வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் உறுதியேற்க வேண்டும். இல்லையெனில், இன்னொரு சென்னையாக கோவை மாறக்கூடிய நாள் வெகுதுாரமில்லை!குறுங்காடு உருவாக்கணும்!n வெள்ளலுார் மற்றும் சிங்காநல்லுார் குளக்கரையில், 'மியாவாக்கி' முறையில், குறுங்காடுகள் வளர்க்கப்படுவதுபோல், நகர்ப்பகுதியில், பூங்காவுக்கென ஒதுக்கிய 'ரிசர்வ் சைட்'டுகளில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும்.
எங்கெல்லாம் காலியிடங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மரக்கன்று வளர்க்க வேண்டும். இவ்விஷயத்தில், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் முனைப்பு காட்ட வேண்டும்.n பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி, சாலையோரங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். ரோடு விரிவாக்கத்துக்காக எந்தெந்த பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டன என்பதை கணக்கிட்டு, மீண்டும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை சிக்கல்கோவைக்கும் வரும்!சென்னை நகர்ப்பகுதியில் 'போர்வெல்'லில் தண்ணீர் இருப்பதில்லை; 100 கி.மீ., கடந்து சென்று, லாரி தண்ணீர் கொண்டு வருகின்றனர். ஓட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இப்போதே நாம் சிக்கனத்துக்கு திரும்பாவிட்டால், கோவைக்கும் அத்தகைய சூழல் வருவதற்கு வெகுநாளாகாது.

மூலக்கதை