தமிழ்க்கடவுள் முருகனின் வடபழனி கோயிலில் தமிழில் அர்ச்சனை- தமிழ்ப்புத்தாண்டில் தொடங்கியது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சென்னையில் தமிழ்க்கடவுளான வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு தமிழில்அர்ச்சனை தொடங்கப்பட்டு உள்ளது. இதனை பக்தர்கள் வரவேற்று உள்ளனர். 

கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. 

இருந்த போதிலும், பெரும்பாலான கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யாமல், சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்து வருகின்றனர். எனவே, அனைத்து கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டான ஏப்ரல் 14-ந் தேதி முதல் சுவாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டு உள்ளது. 

பக்தர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இதேபோல், அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்னை செய்யப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சித்திரை திருநாள் முதல் வடபழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டு உள்ளது. இனி வரும் நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டதும், முதல் அர்ச்சனை தமிழில் மேற்கொள்ளப்படும். பிற நேரங்களில் பக்தர்கள் கேட்டுக் கொண்டால் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் ’’ என்றார்.

மூலக்கதை