எச்.ராஜா வீடு முன் வக்கீல் நந்தினி கைது
காரைக்குடி: மோடி அரசுக்கு எதிராக போராடி வரும் வக்கீல் நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் 2 நாட்களுக்கு முன்பு மானாமதுரை அருகே தாக்கப்பட்டனர். இதற்கு தூண்டுதலாக இருப்பதாக கூறி, சிவகங்கை மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் எச்.ராஜாவின் காரைக்குடி வீட்டின் முன்பு அமர்ந்து நேற்று காலை நந்தினியும், தந்தை ஆனந்தனும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.