பாரதிய ஜனதா ஆட்சியால் நாட்டுக்கு பல இழப்பு: உம்மன்சாண்டி குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாரதிய ஜனதா ஆட்சியால் நாட்டுக்கு பல இழப்பு: உம்மன்சாண்டி குற்றச்சாட்டு

மார்த்தாண்டம்; கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் ேவட்பாளர் எச். வசந்தகுமாரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய, கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி இன்று காலை குமரிக்கு வந்தார். தொடர்ந்து தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: இந்தியா தற்போது முக்கியமான தேர்தலை சந்திக்கிறது.

ராகுல்காந்தி தலைமையில் மதச்சார்பற்ற வலுவான கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறோம்.

நரேந்திர மோடியின் பாசிச ஆட்சி மற்றும் பாஜவை எதிர்த்து நாம் போட்டியிடுகிறோம். காங்கிரஸ் அனைத்து மக்களையும் அரவணைத்து, ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா பல இழப்புகளை சந்தித்துள்ளது. நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது.

நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசின் விரோத செயல்களால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே இந்த ஆட்சியை அகற்றும் வகையில் ராகுல்காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை