குடியாத்தம் தொகுதியில் கூத்து அதிகாரபூர்வ வேட்பாளருக்கு போட்டியாக வேட்புமனு வாங்கிய அதிமுக நிர்வாகி

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடியாத்தம் தொகுதியில் கூத்து அதிகாரபூர்வ வேட்பாளருக்கு போட்டியாக வேட்புமனு வாங்கிய அதிமுக நிர்வாகி

பேரணாம்பட்டு: குடியாத்தம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு போட்டியாக அதிமுக பிரமுகர் வேட்புமனு வாங்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் (தனி) சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு விநியோகம் மற்றும் மனுத்தாக்கல் நடக்கிறது. நேற்று வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை பெற்று சென்றனர்.

இதில் சமூக சமத்துவ படை சார்பில் ஒரு மனுவும், அதிமுக சார்பில் 2 மனுக்களும், சுயேச்சையாக 2 மனுக்களும் என மொத்தம் 6 மனுக்களை தேர்தல் கண்காணிப்பாளர் தேவி (கலெக்டர் அலுவலகம்), மண்டல துணை தாசில்தார் பழனி ஆகியோர் வழங்கினர்.

குடியாத்தம்(தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கனவே அதிமுக வேட்பாளராக குடியாத்தம் கஸ்பா மூர்த்தி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், குடியாத்தம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார்(50) என்பவர் அதிமுக சார்பில் தனது பெயரை பதிவு செய்து 2 வேட்பு மனுக்களும், சுயேச்சையாக 2 மனுக்களும் என 4 மனுக்களை நேற்று வாங்கி சென்றார்.

இச்சம்பவம் குடியாத்தம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை