157!தேரோட்டம், எதிர்சேவையால் சவாலாகும் ஓட்டுச்சாவடிகள்...பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு

தினமலர்  தினமலர்
157!தேரோட்டம், எதிர்சேவையால் சவாலாகும் ஓட்டுச்சாவடிகள்...பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு

மதுரை:மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் மற்றும் எதிர்சேவையன்று லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடப்பதால் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 157 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் செல்வது சவாலாக இருக்கும்.தேர்தல் நடக்கும் ஏப்.,18ல் மாசி வீதிகளில் தேரோட்டம் காலை 6:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடப்பதால் அப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இப்பகுதியை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது.
இங்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச் சாவடிகள் விவரம்:

மீனாட்சி அரசு கல்லுாரி, பாலம் ஸ்டேஷன் மாநகராட்சி ஆய்வாளர் உதவி அலுவலகம், திருவாப்புடையார் கோயில் அருகே உள்ள துவக்கப்பள்ளி, மாநகராட்சி பாரதியார் பள்ளி, ராமராயர் மண்டபம் அருகே சுப்பராயலு நடுநிலை பள்ளி, இளங்கோ மாநகராட்சி பள்ளி, இஸ்மாயில்புரம் ஜெயா நடுநிலை பள்ளி, முனிச்சாலை ராஜதனலட்சுமி பள்ளி, கீழச்சந்தைப்பேட்டை டாக்டர் திருஞானம் பள்ளி, எம்.ஏ.வி.எம்.எம்., பள்ளி, மாநகராட்சி உமறுபுலவர் பள்ளி, ஆயிர வைசியர் மஞ்சப்புத்துார் பள்ளி ஆகியவற்றில் 39 ஓட்டுச் சாவடிகள் உள்ளன.
மத்திய சட்டசபை தொகுதி
சேதுபதி பள்ளி, மங்கையர்கரசி நடுநிலை, லேபர் பள்ளி, ரயில்வே இருபாலர் பள்ளி, மதுரைக்கல்லுாரி பள்ளி, யு.சி., பள்ளி, மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி டி.எம்.ஆர்., பெண்கள் பள்ளி, அவ்வை மாநகராட்சி பள்ளி, ஆயிர வைசியர் பள்ளி, ரோஸ் துவக்க பள்ளி, பெருமாள் தெப்பக்குளம் ஆர்.சி., ரோசரி துவக்க பள்ளி, கான்சாமேட்டு ரோஸ் பிரைமரி பள்ளி, மேலவாசல் மாநகராட்சி பள்ளி, தெற்கு வெளி வீதி மாநகராட்சி பள்ளி, ஈ.வெ.ரா., பெண்கள் பள்ளிகளில் 62 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.
வடக்கு சட்டசபை தொகுதி
ஏப்.,18 காலையே மூன்றுமாவடி பகுதியில் இருந்து கள்ளழகரின் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டும். ஏராளமான மக்கள் கூடுவர். அழகர் செல்லும் பகுதிகளில் சூழ்நிலைக்கேற்ப போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். இதேநிலை மாலை வரை தல்லாகுளம் வரை நீடிக்கும். இப்பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகள் விவரம்:கோ.புதுார் டான் பாஸ்கோ பள்ளி, ஆர்.சி., நடுநிலை பள்ளி, சூர்யா நகர் லுார்தன்னை மேல்நிலை, லுாசிபெரி நோபல் பெண்கள் பள்ளி, நிக்கல்சன் மாத் நர்சரி, அல்அமீன், புனித மேரி ஆன், சொக்கிகுளம் காக்கைபாடினியார், அழகர்கோவில் ரோடு அமெரிக்கன் கல்லுாரி, தல்லாகுளம் ஏ.சி., மேல்நிலை பள்ளிக்கு உட்பட்ட 56 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுஉள்ளது. அதற்கேற்ப போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

மூலக்கதை