பன்னாடுகளில் வாழும் தமிழ் மகளிர் சார்பில் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கை அமைக்க ஒப்புதல் தெரிவித்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

பன்னாடுகளில் வாழும் தமிழ் மகளிர் சார்பில் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கை அமைக்க ஒப்புதல் தெரிவித்துள்ள உலகத் தமிழாராய்ச்சி இயக்குநர் கோ. விசயராகவன், தமிழாய்வுப் பணிகளுக்கு உலகத்தமிழர் அதிக அளவில் நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்கா, துபாய், பப்புவா கினியா, சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, கனடா உட்பட பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மகளிர் ஒன்றிணைந்து ஐயை உலகத் தமிழ் மகளிர் மன்றம் என்ற அமைப்பின் பெயரில் தமிழ் வரலாறு, தமிழியல் சார் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடல் சார் தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு வழிகாட்டலில் செயல்பட்டு வரும் இவ் வமைப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழ் வணிகமும் அதன் தொன்மையும் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கைத் தொடங்கி வைத்த இயக்குநர் விசயராகவன், பிறர் கடல் அலையைக் கண்டு பயந்த போது, கடல் அலை மீது பயணம் செய்து உலகம் முழுதும் வணிகம் செய்தவன் தமிழன் என்றும் புகழாரம் சூட்டினார்.

கருத்தரங்கில் வெளி நாடுகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஐயை களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டன.

பெண் ஆய்வறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தனர்.

நர்த்தகி நடராஜ், துபாய் தமிழ்ச் சங்கம் ஜெயந்திமாலா சுரேஷ், பப்புவா கினியா ஆளுநர் மனைவி சுபா சசீந்தரன், நடிகர் பாண்டிய ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை