தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 8வது கட்டமாக 60 பேரிடம் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 8வது கட்டமாக 60 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 8வது கட்டமாக 60 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த கலவரம், தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுப்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் இதுவரை தூத்துக்குடியில் 7 முறை முகாமிட்டு விசாரணை நடத்திச் சென்றார். மேலும் சென்னையில் உள்ள அலுவலகத்திலும் விசாணை நடத்தினார்.

தற்போது வரை 140க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் தூத்துக்குடி வந்த நீதிபதி அருணா ஜெகதீசன், 8வது கட்டமாக இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து வருகிறார். வரும் 21ம் தேதி வரை விசாரணை நடக்கிறது.

இம்முறை தினமும் 15 பேர் என்ற ரீதியில் 60 பேரிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர்கள், அபிடவிட் தாக்கல் செய்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடக்கிறது.

.

மூலக்கதை