இணை செயலருக்கு கடிதம் அனுப்ப. ஆயத்தம்! 22 விஷயம் குறித்து விரிவான அறிக்கை

தினமலர்  தினமலர்

திருப்பூர்:திருப்பூர் தொழில்துறையினர் முன்வைத்த கோரிக்கைகள், துறை வாரியாக தொகுக்கப்பட்டு, சிறு, குறு நிறுவன இணை செயலருக்கு அனுப்பப்படுகிறது.மத்திய சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துணை இணைச் செயலர் ஸ்ரீனிவாஸ் பண்ட்லா, திருப்பூரில், 6ம் தேதி, மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது, திருப்பூர் 'சைமா', ஏற்றுமதியாளர் சங்கம், தொழில் பாதுகாப்புக்குழு, இந்திய தொழில் கூட்டமைப்பு உட்பட பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்று, ஆடை உற்பத்தி, விசைத்தறி தொழில் துறைகள் சந்தித்துவரும் பிரச்னை, அதற்கான தீர்வுகள் குறித்து, இணை செயலரிடம் விளக்கம் அளித்தனர்.இ.எஸ்.ஐ., மருத்துவமனை, தொழிலாளர் குடியிருப்பு வேண்டும்; பின்னலாடை துறைக்கு தனி வாரியம் வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகளை தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.மாவட்ட முன்னோடி வங்கி, தொழில் அமைப்பினரின் கோரிக்கைகளை துறை வாரியாக தொகுத்துள்ளது.தொழிலாளர் துறை, ஜவுளி, தொழில் மற்றும் வர்த்தக துறை, நிதித்துறை, விமான போக்குவரத்து உள்ளிட்ட ஆறு துறை சார்ந்து, 22 வகையான தேவைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தர மூர்த்தி கூறியதாவது:கலந்தாய்வு கூட்டத்தில், திருப்பூர் தொழில் அமைப்பினர் தெரிவித்த கோரிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளன.எந்தெந்த துறை அமைச்சகத்தின் கீழ் என்னென்ன, தேவைகள், கோரிக்கைகள் என்கிற அடிப்படையில், விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.ஆறு துறை சார்ந்து, 22 கோரிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளது. அவை, கலெக்டர் ஒப்புதல் பெறப்பட்டு, சிறு, குறு நிறுவன துறை இணை செயலருக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்.

மூலக்கதை