கள்ளக்குறிச்சி 33 வது மாவட்டம்-முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கள்ளக்குறிச்சியை தமிழகத்தின் 33 வது மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தின் கடைசி நாளில் இந்த  அறிவிப்பு வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்தன. அவ்வப்போது நிர்வாகக் காரணங்களுக்காக பெரிய மாவட்டத்தை 2 ஆகப் பிரிப்பது  நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் பெரிய மாவட்டமான விழுப்புரம் 2 ஆகப் பிரிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.
விழுப்புரம்மாவட்டம் பெரிதாக இருப்பதாகவும், அரசு பணிகளை எளிதில் பெறமுடியவில்லை என்றும் அம்மாவட்டத்தில்இருந்த கள்ளக்குறிச்சி மக்கள் ஏற்கனவே  கோாிக்கை விடுத்து இருந்தனா். இதே கோாிக்கையை அம்மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் முன்வைத்தனா். 

இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி கவர்னரின் உரைக்கு நன்றி தொிவித்து பேசினாா். அப்போது விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா். 

விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்த நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக்கப்படுகிறது. விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் நியமிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 

முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா். மேலும் கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். 

மூலக்கதை