உலகத் தமிழாய்வு மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தமிழிசைக் கருவிகள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலகத் தமிழாய்வு மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தமிழிசைக் கருவிகள்!

சென்னையில் கடந்த 7-ந்தேதி உலகத் தமிழாய்வு மாநாடு மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை தொடக்கவிழா நடைபெற்றது.

மாநாட்டில் தமிழிசைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கருவிகளைக் கோசை நாகராசன் குழுவினர் மாநாட்டில் இசைத்து மக்களை அசத்தினர்.

நரம்பிசை கருவிகள், தோற்கருவிகள் , காற்றிசைக் கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

மகுட மேளம், பெரிய மேளம், பம்பை மேளம், துடுப்பு மேளம் , கொட்டு மேளம், எருதுகட்டு மேளம், மொடா மத்தளம், கயிலாய மேளம், கொம்பு வாத்தியம், நெடுந்தாரை, உருமி ஆகிய தமிழ்ப் பண்பாட்டு மேளங்கள் ஆகியவை மாநாட்டிற்கு வருகை தந்த மக்களின் கண்களைக் கவர்ந்தன.

மூலக்கதை