பாலிசி போட்டு 3 வருஷம் ஆச்சா கவலையை விடுங்க பாஸ்

தினகரன்  தினகரன்
பாலிசி போட்டு 3 வருஷம் ஆச்சா கவலையை விடுங்க பாஸ்

* ஒரு பாலிசி எடுத்துட்டா போதும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. ஆனாலும், சிலருக்கு சந்தேகம், கவலை இருக்கத்தான் செய்யும். பாலிசி போட்டாச்சு... நமக்கு பிறகு குடும்பத்துக்கு கண்டிப்பா கை கொடுக்குமா என்பதுதான் அந்த கவலை.* இது நியாயமானதுதான் ஏனென்றால், எவ்வளவோ இன்சூரன்ஸ் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கடந்த 2016-17 நிதியாண்டில் மட்டும் நிறுவனங்கள் 8.6 லட்சம் கோரிக்கைகளுக்கு உரியவர்களுக்கு பலன் அளித்துள்ளன. ஆனால், 12,769 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்கிறது இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்.* எல்லா விவரங்களும் மிகச்சரியாக, உரிய ஆதாரங்களோடு, ஆவணங்களுடன் கொடுத்தால் ஒரு போதும் நிராகரிக்க வாய்ப்பில்லை. இதுபோல் பாலிசி எடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு வரும் கோரிக்கைகளையும் காப்பீட்டு நிறுவனங்கள் பொதுவாக நிராகரிப்பது கிடையாது.* பொய்யான காரணங்களை கூறி மோசடியாக கோரியிருந்தால் மட்டுமே நிராகரிக்கப்படும். மற்றபடி நேர்மையான கோரிக்கைகள் முறையாக செட்டில்மென்ட் செய்யப்படுகின்றன.* முன்பு பாலிசி எடுத்து 2 ஆண்டுக்கு பிறகு கிளைம் செய்வோருக்கு பலன்கள் வழங்கம் வகையில் விதிகள் இருந்தது. முறைகேடுகள், மோசடிகள் அதிகரித்ததால் 1938ம் ஆண்டு  காப்பீட்டு விதி பிரிவு 45ல் உரிய மாற்றங்கள் செய்து 3 ஆண்டாக மாற்றப்பட்டது. ஆனால், பாலிசி தவணைகள் முறையாக செலுத்தப்பட்டு காலாவதியாகாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமனது. *  பாலிசி எடுக்கும்போது பெயர், பிறந்த தேதி, பணி, வருவாய், உடல் நலம், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரம், ஏற்கெனவே வேறு பாலிசி எடுத்திருந்தால் அதுபற்றிய விவரம், வாரிசு நியமனம் ஆகியவற்றை முறையாக மேற்கொண்டிருக்க வேண்டும். நாம்தான் பாலிசி போட்டு விட்டோமே என அசட்டையாக இருந்து விடாதீர்கள்.

மூலக்கதை