தண்ணீர் தடை தாண்டுமா?பி.ஏ.பி., வாய்க்காலில் ஆக்கிரமிப்பு: 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பாதிப்பு

தினமலர்  தினமலர்
தண்ணீர் தடை தாண்டுமா?பி.ஏ.பி., வாய்க்காலில் ஆக்கிரமிப்பு: 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பாதிப்பு

திருப்பூர்:திருப்பூரில் பொதுப்பணித்துறை அதிகாரி களின் அலட்சியம் காரணமாக, 50க்கும் மேற்பட்ட பி.ஏ.பி., வாய்க்கால்கள் மாயமாகியுள்ளன. இதனால், 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசன வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர் பகுதியில், மங்கலம், இடு வாய், முருங்கம்பாளையம், வீரபாண்டி, முத் தணம்பாளையம், ராக்கியாபாளையம், பழவஞ்சிபாளையம் என பல வாய்க்கால்கள் உள்ளன. இவ்வாறு, பிரதான கால்வாய், கிளை கால்வாய், பிரிவு கால்வாய், மடைக்கால்வாய் என, 50க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள், 200 கி.மீ., தூரம் வரை அமைந்துள்ளன.முற்றிலும், கான்கிரீட் கால்வாய், மடைகள், ஜீப்டிராக் என, 50 முதல் நூறு அடி அகலம் வரை வாய்க்கால்கள் கட்டப்பட்டுள் ளன. பி.ஏ.பி., வாய்க்கால்கள் மூலம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. நகர வளர்ச்சி காரணமாக, பி.ஏ.பி., வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் மாய மாகியுள்ளன. வாய்க்கால்களை அழித்து, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
நகர பகுதியிலுள்ள பி.ஏ.பி., வாய்க்கால்களில் குறிப்பிட்ட தூரம் மட்டும் மாயமானாலும், நகரை ஒட்டிய பகுதிகளில், பி.ஏ.பி., பாசன நிலங்களில் இன்றளவும் விவசாயம் நடந்து வருகிறது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலம், வாய்க் கால் என குற்ற உணர்ச்சியே இல்லாமல், வாய்க்கால்கள் தொடர்ந்து, ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
மாநகராட்சியும், பொதுப் பணித்துறை நிலங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. பழவஞ்சிபாளையம் வாய்க்கால், திருக்குமரன் நகர், 3வது வீதியில், வாய்க்காலை மறைத்து, கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப் பட்ட நிலையில், செப்டிக் டேங்கில் தண்ணீர் கலந்து வருகிறது.இவ்வாறு, நகர பகுதியிலுள்ள பெரும்பாலான வாய்க்கால்கள் அழித்து, ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பைகள், சாக்கடை, மனித கழிவுகள் கலக்கும் இடமாகவும் மாற்றப்பட் டுள்ளது.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, பல நூறு ஏக்கர் பரப்பளவு வாய்க்கால்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையவையாகும். ஆக்கிரமிப்புகளால் மாயமான வாய்க்கால்களின் மதிப்பு, 50 கோடி ரூபாய் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பூரில் தொடர்ந்து, பி.ஏ.பி., வாய்க்கால்கள், ஆக்கிரமிப்புகளால் மாயமாகி வரும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. பாசனத்திற்கு நீர் திறந்தாலும், விவசாய நிலங்களுக்கு சென்று சேரா மல், ஆக்கிரமிப்பாளர்களின் கிணறுகளுக்கும், லாரி தண்ணீர் விற்பனைக்கும் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.என@வ, "பி.ஏ.பி., வாய்க்காலையும் காணோம், வரும் தண்ணீரையும் காணோம்,' என, திருப்பூர் பகுதி பி.ஏ.பி., விவசாயிகள் வேதனை தெரிவித்து வருவதோடு, அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வதில்லை என்கின்றனர்.
எனவே, திருப்பூர் பகுதியிலுள்ள, பி.ஏ.பி., வாய்க்கால்களை மீட்க, பொதுப்பணித்துறையின ரும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, பி.ஏ.பி., வாய்க்கால்களை மீட்கவும், பல ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களையும் காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.இது குறித்து பி.ஏ.பி., பாசன சங்க முன்னாள் தலைவர் மணி கூறியதாவது:திருப்பூர் பகுதியிலுள்ள, கிளை கால்வாய், பகிர்மான கால்வாய் என, 50க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளால் மாயமாகியுள்ளன. மீதமுள்ள வாய்க்கால்களும், பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் வரும் போது, வாய்க்கால்களை கட்டடங்களுக்குள் தேட வேண்டியுள்ளது.
இது குறித்து, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், கண்டு கொள்வ தில்லை. இதனால், பொதுப்பணித்துறை நிலம் என தெரிந்தும், சட்ட விரோத ஆக்கிரமிப்பு என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.இவ்வாறு, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி., வாய்க் கால்களையும், பாசன நிலங்களையும் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மூலக்கதை