சாத்தூரில் கரும்பு தட்டுப்பாடு; கட்டு ரூபாய் 1500க்கு விற்றதால் பொதுமக்கள் அவதி

தினமலர்  தினமலர்

சாத்துார்;சாத்துாரில் கரும்பு தட்டுப்பாடு காரணமாக ஒரு கட்டு கரும்பு ரூபாய் 1500க்கு விற்பனையானது. சாத்துாரில் தைப்பொங்கலின் போது மதுரை, மேலுார் பகுதி களில் இருந்து வழக்கமாக கரும்பு இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.அதிகளவு கரும்பு வரும் என்தால் சாத்துாரில் இது வரை தை பொங்கலின் போது கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது இல்லை. பல வருடங்களாக கட்டு ஒன்றுரூ 1200க்கு மேல் விலை போனதில்லை. மேலும் பொங்கல் அன்று வரை கரும்பு விற்கப்படும். அப்போது ஒரு கட்டு கரும்பு ரூபாய் 100க்கு கிடைக்கும்.பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம், தீப்பெட்டி தொழில் மந்தம், நிப்புக்கம்பெனிகள் சுணக்கம், என தொழில்கள் மந்த கதியில் உள்ளதால் இந்த வருடம் குறைந்த அளவிலான கரும்பு கட்டுகளே மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தன. ஆரம்பத்தில் 15 கரும்பு கொண்ட கட்டு 750 ரூபாய்க்கு விற்றது. இது நேரம் ஆக ஆக கரும்பு ஒன்று 100ரூபாய் என விலை கூறப்பட்டது. தை பொங்கல் அன்று எப்படியும் கரும்பு வாங்க வேண்டும் என விழித்த பலர் வியாபாரிகள் கூறி விலைக்கு கரும்பை வாங்கி சென்றனர். தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வழங்கிய கரும்புகளை தொழிலாளர்கள் தை பொங்கலை கொண்டாட விலை குறையும் என எதிர்பார்த்து வந்த நடுத்தரமக்கள் கரும்பை பார்த்து விட்டு வாங்க முடியாமல் திரும்பி சென்றனர். வழக்கமாக கொண்டு வரும் கரும்பை விற்க முடியாமல் தெருவில் போட்டு விட்டுச் செல்லும் வியாபாரிகள் போகி அன்றே எல்லா கரும்பும் விற்று போனதால் மகிழ்ச்சியடைந்தனர்.

மூலக்கதை