தொழிலாளர்களின் கணக்கில் பிஎப் வட்டியை சேர்க்க உத்தரவு

தினகரன்  தினகரன்
தொழிலாளர்களின் கணக்கில் பிஎப் வட்டியை சேர்க்க உத்தரவு

புதுடெல்லி, மே 26:  கடந்த நிதியாண்டுக்கான பிஎப் வட்டி 8.55 சதவீதத்தை தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் சேர்க்க கள அதிகாரிகளுக்கு பிஎப் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.   தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் உள்ள பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டுக்கான வட்டியை நிர்ணயம் செய்ய  பிஎப் அறக்கட்டளை வாரிய கூட்டம், கடந்த பிப்ரவரி மாதம்  நடந்தது. இதில் 2017-18 நிதியாண்டுக்கான பிஎப் வட்டி 8.55 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன்பு 2016-17 நிதியாண்டில் பிஎப் வட்டியாக 8.65 சதவீதம் வழங்கப்பட்டது.  2015-16ல் 8.8 சதவீதமும், 2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டுகளில் 8.75 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டது.கடந்த நிதியாண்டுக்கான வட்டியின்படி  586கோடி வழங்க வேண்டி வரும் என பிஎப் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.  இந்நிலையில், நிதியமைச்சகம் 8.55 சதவீத வட்டியை தொழிலாளர்களுக்கு வழங்க  கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் வட்டியை கணக்கிட்டு சேர்க்குமாறு பிஎப் கள அதிகாரிகளுக்கு பிஎப் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாக பிஎப் அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போதைய பிஎப் வட்டி கடந்த 5  ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை