பழைய வெங்காய வரத்து அதிகரிப்பு:ஒட்டன்சத்திரம் மார்கெட்டிற்கு 25 சதவீதம்

தினமலர்  தினமலர்

ஒட்டன்சத்திரம்;வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாததால், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் பழைய வெங்காயம் வரத்து 25 சதவீதம் அதிகரித்துள்ளது.ஒட்டன்சத்திரத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் காய்கறிகள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மற்ற காய்களுடன் ஒப்பிடுகையில் தக்காளி, சின்ன வெங்காயம் அதிகமாக பயிரிடப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது. அப்போது விலை குறைவாக இருந்ததால் விவசாயிகளில் சிலர் விற்காமல், மூங்கில் பட்டறைகளில் வைத்து பாதுகாத்து, விலை அதிகரிக்கும் போது விற்றுக் கொள்ளலாம் என்றிருந்தனர்.
வெயிலால் அழுகும் நிலை
இந்நிலையில் கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பாதுகாக்கப்பட்ட வெங்காயம் அழுகும் நிலைக்கு சென்றது. இனியும் வைத்திருந்தால் விற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் பழைய வெங்காயத்தை விற்பதற்கு மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். இதனால் வரத்து 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் விலை குறையவில்லை. ஒரு கிலோ வெங்காயம் குறைந்த பட்சமாக ரூ.10 லிருந்து அதிகபட்சமாக ரூ.25 வரை விற்பனையானது.

மூலக்கதை