ஆம்னி பஸ்கள் மோதல்: 2 டிரைவர்கள் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆம்னி பஸ்கள் மோதல்: 2 டிரைவர்கள் பலி

கள்ளக்குறிச்சி: சென்னையில் இருந்து திருப்பூருக்கு நேற்று இரவு 36 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை ரமேஷ் (39) என்பவர் ஓட்டி சென்றார்.

இது போல பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு 12 பயணிகளுடன் சென்ற ஆம்னி பஸ்சை அடைக்கலம் (45) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே புறவழிச்சாலையில் பிரிதிவிமங்கலம் என்ற இடத்தில் வந்த போது பொள்ளாச்சியில் இருந்து வந்த ஆம்னி பஸ் முன்னாள் சென்ற பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த திருப்பூருக்கு சென்ற ஆம்னி பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 2 ஆம்னி பஸ் டிரைவர்கள் ரமேஷ், அடைக்கலம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 2 பேருந்துகளில் வந்த திருச்சி முஸ்தபா (20), கோவை நந்தகுமார் (21), சென்னை அயனாவரம் சதீஷ்குமார் (21), கோவை மகேஸ்வரி (32), சென்னை வேளச்சேரி காசிபாண்டி (34), திருச்சி ராமமூர்த்தி உள்பட 42 பயணிகள் படுகாயமடைந்தனர்.

தியாகதுருகம் போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக புறவழிச்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் மேல் சிகிச்சைக்காக இன்று காலை சேலம், சென்னை, கோவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

.

மூலக்கதை