நடிகர் அல்வா வாசு உடல் தகனம்: ரசிகர்கள் இறுதி அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகர் அல்வா வாசு உடல் தகனம்: ரசிகர்கள் இறுதி அஞ்சலி

மதுரை: மதுரை முனிச்சாலை ரோடு ருக்மணிபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் வாசு என்ற `அல்வா’ வாசு (57). 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது மனைவி அமுதா வாசுதேவன், மகள் கிருஷ்ண ஜெயந்திகா.
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து, அல்வா வாசு பல படங்களில் நடித்துள்ளார். அமைதிப்படை திரைப்படத்தில் நடிகர் சத்யராஜுக்கு அல்வா வாங்கித் தரும் காட்சியில் நடித்து, பெயர் பெற்றதால், ரசிகர்களால் அல்வா வாசு என அழைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த அல்வா வாசு, 10 நாட்களுக்கு முன்னர் மதுரை மேலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு 10. 40 மணியளவில் அல்வா வாசு இறந்தார்.

முனிச்சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இன்று காலை இயக்குநர்கள் சசிக்குமார், வெற்றிமாறன், திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தத்தனேரியில் உள்ள மின் மயானத்தில் மதியம் 3 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

.

மூலக்கதை