நவ.18, 19ம் தேதிகளில் அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
நவ.18, 19ம் தேதிகளில் அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில்  அம்பத்தூர் - ஆவடி ரயில்நிலையங்களுக்கு இடையில் ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

அதனால் நவ. 18, 19ம ்தேதிகளில் இந்த வழித்தடத்தில்  பல மின்சார ரயில்கள்  ரத்து ெசய்யப்பட உள்ளன. அதன்படி இந்த 2 நாட்களும் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9. 30, 9. 45, பகல் 11. 30, 12. 10, 1. 20 மணிகளுக்கு புறப்பட்டு திருவள்ளூருக்கும், காலை 10. 00, 11. 45,  மணிகளுக்கு புறப்பட்டு திருத்தணிக்கும்,  காலை 10. 05, 10. 15, 10. 45, பகல் 12. 35 மணிகளுக்கு புறப்பட்டு ஆவடிக்கும்,  காலை 10. 30 பகல் 12. 00 மணிகளுக்கு புறப்பட்டு கடம்பத்தூருக்கும், பகல் 11. 05, 12. 50 மணிகளுக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கும், பகல் 11. 35, 12. 20, 1. 00 மணிகளுக்கு புறப்பட்டு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கும் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9. 50, பகல் 1. 05 மணிகளுக்கு புறப்பட்டு திருவள்ளூருக்கும்,  காலை 10. 05 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் சைடிங்குக்கும்,  பகல் 11. 10 மணிக்கு புறப்பட்டு ஆவடிக்கும்,  பகல் 12. 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கும் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.

திருவள்ளூரில் இருந்து காலை 9. 10, 10. 05, 10. 50, பகல் 11. 25, 12. 00, 1. 05, 2. 40 மணிகளுக்கும்,  ஆவடியில் இருந்து  காலை 9. 55, பகல் 11. 05 மணிகளுக்கும், அரக்கோணத்தில் இருந்து காலை 8. 55, பகல் 12. 00 மணிகளுக்கும், பட்டபிராம் சைடிங்கில் இருந்து காலை 10. 30, பகல் 11. 25, 12. 50 மணிகளுக்கும், திருத்தணியில் இருந்து காலை 9. 40 மணிக்கும், கடம்பத்தூரில் இருந்து பகல் 1. 40 மணிக்கும் புறப்பட்டு சென்னைசென்ட்ரல் வரும் மின்சார ரயில்கள் இந்த 2 நாட்களும் ரத்து செய்யப்படுகின்றன. திருத்தணியில் இருந்து  காலை 8. 50, திருவள்ளூரில் இருந்து பகல் 11. 05, ஆவடியில் இருந்து பகல் 12. 10, கடம்பத்தூரில் இருந்து பகல் 12. 05 மணிகளுக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். இந்த ரயில்கள் ரத்து காரணமாக  ஏற்படும் பயணிகள் நெரிசலை தவிர்க்க நவ. 18, 19 தேதிகளில் 35 சிறப்பு மின்சார ரயில்கள் சென்னை- அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன. இந்தத் தகவல்கள் தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

.

மூலக்கதை