சென்னையில் இருந்து கேரளாவுக்கு சபரிமலை, கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் இருந்து கேரளாவுக்கு சபரிமலை, கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள்

சென்னை : சபரிமலை செல்பவர்களுக்காகவும், கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காகவும் நவ. 13 முதல் ஜன. 19 வரை சென்னையில் இருந்து கேரளாவின் கொல்லத்திற்கு பல மடங்கு கட்டண சிறப்பு, சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சபரிமலை, கிறிஸ்துமஸ் கால பயணிகள் நெரிசலை தவிர்க்க சென்னையில் இருநது கேரளாவின் கொல்லத்திற்கு பல மடங்கு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து நவ. 13ம் தேதியில் இருந்து ஜன. 17ம் தேதி வரை திங்கட்கிழமைகளில்  மாலை 6. 20 மணிக்கு புறப்படும் பல மடங்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்(06041)  மறுநாள் பகல் 11 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து நவ. 14ம் தேதியில் இருந்து ஜன. 11ம் தேதி வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 4. 15 மணிக்கு புறப்படும் பல மடங்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்(06042) மறுநாள் காலை 8. 30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

கொல்லத்தில்  இருந்து ஜன. 16ம் தேதி  மாலை 4. 15 மணிக்கு புறப்படும் பல மடங்கு  கட்டண சுவிதா  சிறப்பு ரயில்(82640) மறுநாள் காலை 8. 30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து  சேரும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து நவ. 17ம் தேதியில் இருந்து ஜன. 19ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில்  இரவு 10. 30 மணிக்கு புறப்படும் பல மடங்கு   கட்டண சுவிதா சிறப்பு ரயில்(82635)  மறுநாள் பகல் 2. 30 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து நவ. 19ம் தேதியில் இருந்து டிச. 17ம் தேதி வரையிலும் ஜன. 7, 21 தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை  மாலை 3. 15 மணிக்கு புறப்படும் பல மடங்கு  சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்(82636) மறுநாள் காலை 7. 20 மணிக்கு சென்னை  சென்ட்ரல் வந்து சேரும்.

கொல்லத்தில்  இருந்து டிச. 24, 31, ஜன. 14 ஆகிய தேதிகளில்  மாலை 3. 15 மணிக்கு புறப்படும் பல மடங்கு  சிறப்புக் கட்டண  சிறப்பு ரயில்(06044) மறுநாள் காலை 7. 20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து  சேரும். இச்சிறப்பு ரயில்கள்  இருவழிகளிலும் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை,  சேலம், ஈரோடு,  திருப்பூர்,  கோவை,  பாலக்காடு, திருச்சூர், ஆலவா,  எர்ணாகுளம் நகரம், கோட்டயம்,  செங்கனஞ்சேரி, திருவலா,  செங்கன்னூர்,  காயங்குளம் ஆகிய ரயில்நிலையங்களிலும், சென்னை வரும் ரயில்கள் பெரம்பூரிலும் நிற்கும்.

இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இப்போது நடைபெறுகிறது.

.

மூலக்கதை