வெப்பசலனத்தால் தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தினகரன்  தினகரன்

சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் 1 செ.மீ மழை பெய்துள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை