டெங்குவுக்கு ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெங்குவுக்கு ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு

சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

தமிழக அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் கொசு உற்பத்தி பெருகி டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் உயிரிழந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது அரசு சார்பில் முகாம்கள் அமைத்து நிலவேம் கசாயம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கொசு உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
 இதனால் நாள்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரத்தை சேர்ந்த பிரீத்தீ என்ற பட்டதாரி பெண் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனனுரை சேர்ந்த விஷ்மிதா என்ற சிறுமி என்ற பெண் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் தேனூர் புதுக்காலனியை சேர்ந்த முனியாண்டி என்பவர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் பெரிப்பட்டினத்தை சேர்ந்த ஜமால் முகைதீன் என்பவர் காய்ச்சல் காரணமாக இறந்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி. நகரி–்ல தனியார் பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவன் விஷ்ணு பிரகாஷ் உயிரிழந்தார். இப்படி ஒரே நாளில் 6 பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை