முட்டை விலை 15 காசு குறைந்தது

தினகரன்  தினகரன்

நாமக்கல் : நாமக்கல்லில் நேற்று, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலையில் 15 காசுகள் குறைத்து 378 காசாக நிர்ணயிக்கப்பட்டது. புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை விபரம் (காசுகளில்): ஐதராபாத்-340, விஜயவாடா-352, பர்வாலா-344, மும்பை-385.

மூலக்கதை