2.39 லட்சம் மண்வள அட்டைகள்வினியோகம்:இரு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு

தினமலர்  தினமலர்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் 2.39 லட்சம் மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் தேசிய மண்வள அட்டை இயக்கம் செயல்பட்டு வருகிறது. மண் மற்றும் அதிலுள்ள சத்துக்களின் விவரங்களை வகைப்படுத்தி, மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன் மூலம் மண்ணின் தன்மை அறிந்து நிலத்திற்கு ஏற்ற சத்துடைய உரமிடுதல் வேண்டும்.
2.39 லட்சம் அட்டைகள்: திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளாக நீர் மற்றும் நீரற்ற நிலபரப்புகளில் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் விவரங்களின் அடிப்படையில், விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டது. இதுவரை மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 39 ஆயிரத்து 821 மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே பகுதியில் 2 கட்டமாக மண் மாதிரிகள் ஆய்வு செய்யும் பணியை அதிகாரிகள் துவங்கியுள்ளனர். இந்த 2 ஆண்டுகளில் மண்ணின் தன்மை மற்றும் வேறு ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என்பதை அறிய திட்டமிட்டுள்ளனர்.
இலக்கு 1.14 லட்சம்: இணை இயக்குனர் தங்கச்சாமி கூறுகையில்,' ஏற்கனவே ஆய்வு செய்த பகுதிகளில் மீண்டும் மண் பரிசோதனை செய்ய உள்ளோம். இதில் கிடைக்கும் விவரங்களையு பட்டியலிட்டும் மண் வள அட்டை வழங்கப்படும். இந்தாண்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் அட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது' என்றார்.

மூலக்கதை