திருத்தணியில் குடிநீர் தட்டுப்பாடு: எம்எல்ஏ நிதியுதவி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருத்தணியில் குடிநீர் தட்டுப்பாடு: எம்எல்ஏ நிதியுதவி

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இங்குள்ள அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் குடிநீர் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இக்குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, திருத்தணி பகுதிகளில் 8 ஆழ்துளை கிணறுகளை அமைக்க திருத்தணி எம்எல்ஏ பி. எம். நரசிம்மன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ஒதுக்கியுள்ளார்.

மேலும், திருத்தணி பகுதிகளில் 2 தனியார் டிராக்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய திருத்தணி எம்எல்ஏ ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் 4 டிராக்டர்களில் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார்.

.

மூலக்கதை