லாரி ஸ்டிரைக்கால் வெறிச்சோடிய தமிழக- கேரளா எல்லை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாரி ஸ்டிரைக்கால் வெறிச்சோடிய தமிழக கேரளா எல்லை!

நெல்லை: தமிழம் உட்பட 6 மாநிலங்களில் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழக - கேரள எல்லை போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 18 லட்சம் சரக்கு லாரிகள் ஈடுபட்டுள்ளன.

இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு உள்ளட்டவற்றை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், முட்டை, அரிசி, உள்ளிட்டவைகளை ஏற்றி செல்வது வழக்கம்.

இன்று லாரிகள் ஸ்டிரைக் அறிவித்ததால் ஏராளமான லாரிகள் சாலைகளின் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான லாரிகள் ஓடாதததால் தமிழக கேரள எல்லை பகுதியான செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்நி சென்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஏராளமான வாகனங்கள் இந்த வழியே சென்றதால் அங்கு நள்ளிரவு வரை சுமார் 1மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு உருவானது.

மூலக்கதை