108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை: ஓ.பன்னீர் செல்வம் வெளியீடு

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியின் தோ்தல் அறிக்கை வெளியிட்டனர். இதில் 108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். ஆர்.கே நகரில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும், அனைவருக்கும் பட்டா , தடையின்றி மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் தரப்படும், ஆரம்ப சுகாதார மையங்களில் போதுமான மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் தரமான சாலை பாதுகாப்பான சாக்கடை வசதிகள் செய்து தரப்படும். முதியோருக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எழில்நகரில் சுற்றுலா மையம் அமைக்கப்படும். நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் அடைக்கப்படும் என பாண்டியராஜன் தேர்தல் வாக்குறுதிஅளித்தார்.

மூலக்கதை