பெருங்களாத்தூரில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதா? பொதுமக்கள் திண்டாட்டம் தொடரும் அவலம்

தினமலர்  தினமலர்
பெருங்களாத்தூரில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதா? பொதுமக்கள் திண்டாட்டம் தொடரும் அவலம்

பெருங்களத்தூர்: பெருங்களத்தூரில் மேம்பாலம் அமைக்கும் பணிகள், நீண்ட நாட்களாக முடங்கி உள்ளதால், திட்டம் கைவிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரயில்வே கடவுப்பாதை மூடப்பட்டு கிடப்பதால், அனைத்த தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பெருங்களத்தூர் ரயில் நிலைத்தில், எல்சி., 32, 33 என, இரண்டு ரயில்வே கடவுப்பாதைகள் இருந்தன. அதில், எல்சி., 32 கடவுப்பாதை, கடந்த 2015 ஜூலையில் புதிய நடைமேம்பாலம் கட்டவதற்காக மூடப்பட்டது.
அதனால் அருகில் உள்ள, எல்.சி., 33 ரயில்வே படவுப்பாதை வழியாக மட்டுமே அனைத்து வாகனங்களும், பாதசாரிகளும் பயன்படுத்தும் நிலை உள்ளது. தினசரி பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் என, பல ஆயிரக்கணக்கான ரயில், பேருந்து பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், அந்த ஒரே கடவுப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
அதனால் எந்த நேரமும் கூட்ட நெரிசல் உள்ள பகுதியாகவே அந்த கடவுப்பாதை உள்ளது.மேலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், மின்சார ரயில்கள் என அதிகளவில் ரயில்கள் அந்த பகுதியை கடக்கும் நேரத்தில் பயன்பாட்டில் இருக்கும் ஒரு கடவுப்பாதையும் மூடப்படுகிறது.
அதனால் கடவுப்பாதையின் இரு புறங்களிலும், போக்குவரத்து ஸ்தம்பித்து விடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலை, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரயில்கள் கடப்பதற்காக, குறைந்தது, 20-35 நிமிடங்கள் வரை கேட் மூடப்படுகிறது.

மூலக்கதை