யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை- சங்கர் ஐஏஎஸ் அகடாமி நிறுவனத் தலைவர் சங்கர் கூறியதாவது: மத்திய சமூக நீதி அமைச்சகம் எஸ். சி மற்றும் ஓ. பி. சி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பணி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க சங்கர் ஐஏஎஸ் அகடாமியை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 50 பேருக்கு இலவச பயிற்சி வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பயிற்சி முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். உள்ளூர் மாணவர்களுக்கு ரூ. 2,500, வெளியூர் மாணவர்களுக்கு ரூ. 5000, மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு உதவி தொகையாக ரூ. 2000 வழங்கப்படும்.

மாணவர்கள் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

10, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வான மாணவர்களுக்கு எழுத்து தேர்வு 1 மணி நேரம் நடைபெறும்.

நேர்முக தேர்வின் செயல்திறன் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு பின்பு தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிக்கு வருகிற 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

12ம் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும். 20ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

தேர்வு முடிவுகள் 24ம் தேதி வெளியிடப்படும். நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் 26ம் தேதி நடைபெறும்.

இறுதி முடிவு ஏப்ரல் 28ம் தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை