குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

தினகரன்  தினகரன்

டெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அரசியல்வாதிகளிடமும் நாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் குடியரசு தலைவர் போட்டியில் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை