நள்ளிரவில் பயங்கர தீ 52 வீடுகள் நாசம்: ரூ.1 கோடி சேதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நள்ளிரவில் பயங்கர தீ 52 வீடுகள் நாசம்: ரூ.1 கோடி சேதம்

பாபநாசம் : தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சக்கராப்பள்ளியில் முகமதியா தெரு உள்ளது. இங்கு நெருக்கமாக அதிகளவில் வீடுகள் உள்ளன.

இந்த தெருவின் பின்புறம் ஒரு குப்பை மேடு உள்ளது. நேற்று மாலை அந்த வழியாக நடந்து சென்ற யாரோ, அணைக்காமல் வீசி சென்ற சிகரெட் துண்டால் குப்பை மேடு தீப்பிடித்து எரிந்தது.

இதை அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனாலும் சரியாக அணைக்காமல் விட்டு விட்டனர்.

நள்ளிரவில் காற்றில் இந்த குப்ைபமேட்டில் இருந்து தீப்பொறி பறந்து ெசன்று அருகில் இருந்த ரகமத்நிஷா என்பவரது கூரை வீட்டில் விழுந்து தீப்பிடித்தது.

அப்போது காற்று பலமாக வீசியதால்தீ மளமளவென அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது.

வீடுகள் தீப்பிடித்து எரிவதை அறிந்ததும், தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.   அப்போது 4 வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால், தீயின் கோரம் அதிகரித்தது. வரிசையாக வீடுகள் தீப்பிடித்து எரிவதை பார்த்து மக்கள் கதறி அழுதனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் 52 வீடுகள் எரிந்து நாசமானது.

மொத்த சேத மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்தில் அமீனா பேகம் (60) என்ற பெண் மட்டும் காயமடைந்தார்.

அவர் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

.

மூலக்கதை