போன் செய்தால் போதும் வீடு தேடி வரும் பெட்ரோல்: புதிய திட்டம் பெங்களூருவில் அறிமுகம்

தினகரன்  தினகரன்

பெங்களூரு: ‘மை பெட்ரோல் பம்ப் டாட் காம்’ என்ற பெயரில் இயங்கும் இணையதள நிறுவனம் இந்த புதிய திட்டத்தை பெங்களூரு  நகரில்  தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு போன் செய்தால் போதும்  உங்கள் வீட்டு வாசலுக்கே பெட்ரோல் வாகனம் வந்து நிற்கும். கடந்த ஏப்ரல்  மாதம்  மத்திய அரசு ‘வீட்டு வாசலில் பெட்ரோல் வினியோகம்’ என்ற திட்டத்தை  தொடங்கியது. அதன்படி பெங்களூரு நகரில் முதன் முதலாக இந்த  திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. தற்போது டீசலை மட்டும் வினியோகிக்கும்  இந்த நிறுவனம், முதல்கட்டமாக 20 லிட்டர் வரை வினியோகம் செய்கிறது.  குறைந்தபட்சம் 20  லிட்டர் என்றும், அதிக பட்சம் 100 லிட்டர் என்றும் பதிவு  செய்தால்  லிட்டருக்கு ரூ.1 மட்டுமே சேவை வரியாக வசூலிக்கப்படுகிறது.  இதற்கான ரசீது  பி.ஓ.எஸ். கருவி மூலம் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக பெட்ரோல், டீசல்  கிடைக்கும் வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம்  விரைவில் ‘ஆப்’ அறிமுகம்  செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மூலக்கதை