300 சென்னை மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
300 சென்னை மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு

சென்னை: சென்னை மீனவர்கள் 300 பேர் ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்டனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கள் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

கடந்த 15ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகுகளில் சென்னை மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். தமிழக ஆந்திர கடல் எல்லையான கிருஷ்ணாம் பட்டினம், மண்ணூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கடல் பகுதியில் தான் மீன்பிடிப்பது வழக்கம்.

அதேபோல் நேற்று மதியம் சென்னையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் கடலில் வலையை விரித்து காத்திருந்த போது அவர்களை ஆந்திர மீனவர்கள் சுற்றிவளைத்தனர். எங்கள் கடல் பகுதியில் நீங்கள் மீன்பிடிக்ககூடாது.

என கூறி காசிமேடு மீனவர்ளை சிறைபிடித்தனர். இதனால் நடுக்கடலிலேயே இரு மாநில மீனவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

முடிவில் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 30 விசைபடகுகளையும், அதில் இருந்த 300 மீனவர்களையும் விரட்டி சிறைபிடித்து கரைக்கு அழைத்து வந்தனர். படகுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் மீனவர்கள் கொண்டு சென்ற உணவுகளையும் பறித்தனர். மேலும் அங்குள்ள பகுதியிலேயே சிறைவைத்தனர்.

இதுகுறித்து நேற்று மாலை காசிமேடு மீன்வர் சங்கங்களுக்கு ஆந்திர மீனவ சங்கங்கள் தகவல் கொடுத்தனர்.

அதில் ஒவ்வொரு விசைபடகுகளுக்கும் தலா ரூ. 2 லட்சம் கொடுத்தால் தான் நாங்கள் படகுகளை விடுவிப்போம் என்று கூறியதாக கூறப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களும் காசிமேடு மீன்வளத்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் சிவக்குமார் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்றுள்ளது. இதுகுறித்து மீனவர் சங்க நிர்வாகி விஜேஷ் கூறுகையில், தொடர்ந்து தொழில்பாதிப்புள்ளாகி உள்ள நாங்கள், வெகு நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றால் பணத்தை கேட்டு எங்கள் மீனவர்ளை சிறைபிடித்துள்ளனர்.

இந்திய கடல் பகுதியில் நாங்கள் மீன்பிடிக்க கூடாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம். இதுபோன்று அடிக்கடி சென்னையை சேர்ந்த மீனவர்ளை சிறைபிடித்து பணம் பறிப்பது தொடர் கதையாகி வருகிறது.

இதை தடுக்க தமிழக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என்றார்.

.

மூலக்கதை