71வது நாளாக நெடுவாசலில் போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
71வது நாளாக நெடுவாசலில் போராட்டம்

ஆலங்குடி: ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஏப்ரல் 12ம் தேதி முதல் கிராம மக்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் 2ம் கட்ட போராட்டத்தை துவங்கினர். நேற்று 70வது நாளாக போராட்டம் நடந்தது.

அப்போது, வேற்றுக்கிரகவாசி போன்று வேடம் அணிந்தவர்களிடம் திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளை காப்பாற்றக்கோரி மனு கொடுப்பது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு தலைவர் தங்க.

சண்முகசுந்தரம் கூறுகையில்,  திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. திட்டத்தை கைவிடுவோம் என்ற உறுதிமொழியை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.

இல்லையேல் மெரினாவில் நடந்த போராட்டத்தைவிட பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்’ என்றார். இன்று 71வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

இதில் கிராம மக்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

.

மூலக்கதை