ஜெர்மன் சென்ற மாணவர்கள்... வந்தாச்சு... அனுபவம் பகிர்ந்து மகிழ்வு

தினமலர்  தினமலர்
ஜெர்மன் சென்ற மாணவர்கள்... வந்தாச்சு... அனுபவம் பகிர்ந்து மகிழ்வு

திருப்பூர் : நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள், ஜெர்மனி சென்று திரும்பியுள்ளனர். வரும் 31ல், தாங்கள் பெற்ற டிசைன் சார்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.
திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி, ஜெர்மனி நாட்டு நெர்ன் பெர்க் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில், மாணவர் பரிமாற்றம் செய்து, டிசைன் சார்ந்த மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.அதன்படி, நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள், பேராசிரியர், என ஏழு பேர் அடங்கிய குழுவினர், கடந்த, 3ல் ஜெர்மனி சென்றனர். நெர்ன் பெர்க் கல்லூரி உதவியுடன், அந்த நாட்டு வர்த்தகர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். பிரபல நிறுவனத்தின் டிசைனர் ஸ்டுடியோவை பார்வையிட்டு செயல்பாடுகளை தெரிந்து கொண்டுள்ளனர்.ஜெர்மனி கல்லூரி தரப்பில், புதிய ஆடை டிசைன் உருவாக்குவதற்கான திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன; அவற்றை, திறம்பட உருவாக்கி கொடுத்துள்ளனர். இவ்வாறு, ஜெர்மனியில் உள்ள டிசைன் சார்ந்த அனைத்து வகையான நுட்பங்களையும் கற்றுக்கொண்டு, தற்போது, தாயகம் திரும்பியுள்ளனர்.இம்மாணவர்கள், ஜெர்மனியில் பெற்ற அனுபவங்கள், புதுமைகள், டிசைன் சார்ந்து தங்களுக்கு கிடைத்த கூடுதல் விவரங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர்; இதற்கான நிகழ்ச்சி, வரும் 31ம் தேதி, நிப்ட்-டீ கல்லூரியில் நடைபெற உள்ளது.கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மோகன்குமார் கூறுகையில், ""ஜெர்மனி சென்ற மாணவர்கள், பயிற்சிகள் முடித்து, திரும்பியுள்ளனர்.

மூலக்கதை