கண்மாய்களின் நிலை குறித்து ஆய்வு ...அவசியம்:நிலத்தடிநீர் வளத்தை பெருக்க நடவடிக்கை தேவை

தினமலர்  தினமலர்

ஆண்டிபட்டி,:ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கண்மாய்கள், நீர் வரத்துகால்வாய்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்த பொதுப்பணித்துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் நீலத்தடி நீர் வளத்தை பெருக்க வாய்ப்பு ஏற்படும்.விவசாயத்தை மட்டும் நம்பி உள்ள ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் கண்மாய் மற்றும் குளங்களை சார்ந்தே உள்ளது.
ஆண்டுதோறும் மானாவாரி விவசாயம் குறைந்து வருகிறது. மழையின்றி நிலத்தடிநீர்பற்றாக்குறையால் இறவை பாசன பரப்பும் குறைகிறது. தொடர்ந்துவிவசாயம் நசிந்ததால், கடந்த சில ஆண்டுக்கு முன் விவசாயிகள்பலரும் தங்கள் நிலங்களை காற்றாலை நிறுவனங்களுக்கு விற்று விட்டனர்.விற்பனையாகாத நிலங்களில் கொட்டைமுந்திரி சாகுபடி செய்துள்ளனர்.தரிசான நிலங்களின் மதிப்பு குறைந்து வருகிறது.
மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், நாகலாறு ஓடையில்ஏற்படும் நீர் வரத்து தெப்பம்பட்டி கண்மாய், கோத்தலுாத்து அதிகாரிகண்மாய், ஆசாரிபட்டி வையாபுரி கண்மாய், ஆண்டிபட்டி கண்மாய்,ஜம்புலிபுத்துார் கண்மாய்களை நிரம்பச்செய்யும்.திசைமாறுகிறதுகடந்த சில ஆண்டுடாக இப்பகுதியின் குறைவான மழை பொழிவால் ஓடையில் போதுமானநீர் வரத்து இல்லை.
அவற்றின் பல இடங்களில் அமைக்கப்பட்டதடுப்பணைகள், நீர் வரத்து பகுதி பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புஇவற்றால் நீர் திசைமாறி கண்மாய்களுக்கு நீர் வரத்துஇல்லை. பாதிப்படைந்த நீர் வரத்து கால்வாய் பகுதி, சேதம் அடைந்துள்ளமதகுகளை சீரமைக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினாலும்,நடவடிக்கை இல்லை. சிறு குளங்கள், ஊரணிகள் பலவும் தொடர்கண்காணிப்பின்றி மறைந்து விட்டது.
இதனால் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. பல இடங்களில் 500 அடிக்கும் ஆழமான'போர்வெல்'கள் வற்றி விட்டது. குளங்கள், கண்மாய்களின் தரம், நீர் வரத்துகால்வாய்களின் நிலை குறித்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வர வழிவகை செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு விவசாயம் சிறக்கும்.

மூலக்கதை