சோதனையிலும் நாட்டுக்காக சாதித்த மாரியப்பன்... வீரேந்திர சேவாக் பாராட்டு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோதனையிலும் நாட்டுக்காக சாதித்த மாரியப்பன்... வீரேந்திர சேவாக் பாராட்டு

மும்பை: ஏழ்மையான சூழலில் வளர்ந்த போதி்லும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம் நாட்டுக்காக சாதனை நடத்தி விட்டார் மாரியப்பன் என்று வீரேந்திர சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த தங்க மகனை நாடே பாராட்டியது. இந்நிலையில் பல்வேறு விளையாட்டு வீரர்களும் இவரை பாராட்டு தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகையும் பாராட்டும் வழங்கப்பட்டது.

Mariyappan's mother,Saroja sold vegetables after the father abandoned them.Mother&child worked hard&in adversity he did this for the country pic.twitter.com/rOd8JjqBa7

கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மாரியப்பனை மீண்டும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தன் பதிவில் கூறுகையில், சிறு வயதிலேயே மாரியப்பனின் தந்தை கைவிட்டு சென்றதால் அவரது தாய் சரோஜா காய்கறிகளை விற்று குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். தாயும், மகனும் கடுமையாக உழைத்துள்ளனர்.

ஏழ்மையான நிலையில் மாரியப்பன் வளர்ந்தபோதிலும் நாட்டுக்கு பெருமையை சேர்த்துவிட்டார் என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை