கேரள மாநிலத்தில் இருந்து மாமிசக் கழிவு ஏற்றி வந்த லாரியை கண்டுகொள்ளதாக தமிழக போலீஸார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கேரள மாநிலத்தில் இருந்து மாமிசக் கழிவு ஏற்றி வந்த லாரியை கண்டுகொள்ளதாக தமிழக போலீஸார்!

களியக்காவிளை: கேரள மாநிலத்தில் இருந்து மாமிசக் கழிவு ஏற்றிக் கொண்டு வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் தமிழக போலீஸார் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் படந்தாலுமூடு ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறை சோதனை சாவடிகள் வழியாக கோழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், மனித உறுப்பு, மாமிச கழிவுகள், மீன் கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளை வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன.

அவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி சென்றுகொண்டிருந்த நிலையில், பொதுமக்கள் அந்த வாகனங்களை சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க துவங்கிய நிலையில், கேரளாவில் இருந்து இந்த கழிவுகளை கொண்டுவருவது சற்று குறைந்து காணப்பட்டது.

மீண்டும் கழிவுகள்

இந்நிலையில் தற்போது கேரளாவில் இருந்து கண்டெய்னர் லாரிகளில் துர்நாற்றம் வீசும் கழிவுகளை குமரிமாவட்டத்தில் உள்ள இடைதரகர்கள் மூலம் தமிழகத்தில் கொண்டுவர துவங்கியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இந்த கழிவுகளை ஏற்றிவரும் லாரிகள் கடந்து செல்லும் பாதையில் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அந்த கண்டெய்னர் லாரிகளை தடுத்துநிறுத்தும் போது ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிடுவது வழக்கம்.

மாற்று பாதையில் பயணம்

பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர் காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள இடைதரகர்களை வைத்து அவர்கள் மூலம் வாகனத்தை கேரளாவிற்கு அனுப்பி வைப்பதாககூறி தமிழக கேரள எல்லை பகுதியான பாறசாலை பகுதிக்கு அனுப்பிவைப்பது வழக்கம். ஆனால் அந்த இடைதரகர்கள் மீண்டும் அந்த வாகனத்தை மாற்று பாதைவழியாக குமரிமாவட்டம் வழியாக மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வருகின்றனர்.

போலீஸார் வரவில்லை

இதுபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழித்துறை நீதிமன்றம் முன்பு கேரளாவில் இருந்து கழிவு ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அப்போது ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பிஓடினார். அப்போது ஊர் பொதுமக்கள் களியக்காவிளை காவல்நிலையத்தில் தகவல்தெரிவித்து ஒருமணிநேரம் ஆகியும் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு வரவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீச துவங்கியது.

போலீஸார் லஞ்சம்

அப்போது நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து விசாரித்து களியக்காவிளை காவல்நிலையத்தில் தகவல்தெரிவித்தார். இதையடுத்தே காவல்துறையினர் இடைதரகர்களுடன் சென்று லாரியை எடுத்து பாதுகாப்புடன் தமிழகத்திற்குள் அனுப்பிவைத்தனர். இதில் போலீசார் லஞ்சம் பெற்று மீண்டும் தமிழகத்திற்குள் செல்ல அனுமதித்து லாரியை விடுவித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை