கத்திரி வெயில் நாளையுடன் முடிகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கத்திரி வெயில் நாளையுடன் முடிகிறது

சென்னை: வெளுத்து வாங்கிய அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது.

முதல் ஒரு வாரம் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அதன் பிறகு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வெயில் 100 டிகிரிக்கு அதிகமாக இருந்தது.

இதனால், மக்கள் பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர். தர்பூசணி, இளநீர், மோர் உள்ளிட்டவற்றை பெருமளவு மக்கள் வாங்கி பருகி வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொண்டனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு படிப்படியாக குறைந்த வெயில் நேற்று மீண்டும் தீவிரம் அடைந்தது. நேற்று திருத்தணியில் 110 டிகிரி வெயில் கொளுத்தியது.

சென்னையில் 106 டிகிரி, கடலூர், கரூர், பரங்கிப் பேட்டை, வேலூர் 104 டிகிரி, மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் (மே 28) முடிவடைகிறது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது.

வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்தது. திருத்தணியில் மே 16ம் தேதி, தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக 114 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியது.

கரூர் பரமத்தியிலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தது.


.

மூலக்கதை