போயஸ் கார்டன் வீடு எனக்கே சொந்தம்: தீபா பரபரப்பு அறிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
போயஸ் கார்டன் வீடு எனக்கே சொந்தம்: தீபா பரபரப்பு அறிக்கை

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா, சசிகலாவையும் அதிமுக அரசையும் விமர்சனம் செய்ய தொடங்கினார். ஆனால் ஜெயலலிதா சொத்துக்கள் குறித்து தீபா கேள்வி எழுப்பாமல் இருந்தார்.

‘’எனக்கு சொத்து எதுவும் தேவையில்லை. ஜெயலலிதா பயன்படுத்திவந்த பேனா மட்டும்போதும்’’ என்று தீபா கூறினார்.

இந்நிலையில், தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தீபா உரிமை கோரி உள்ளார். இதுதொடர்பாக தீபா வெளியிட்ட அறிக்கை: சசிகலாவின் பினாமி எடுபிடி அரசு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை திடீர் நினைவு இல்லமாக மாற்றப்போவதாக அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றிருப்பது ஏமாற்று நாடகமாகும்.

எனது பாட்டி காலத்தில் நாங்கள் அத்தையுடன் ஓடி விளையாடிய எங்கள் பூர்வீக இல்லத்தை இடையில் சதிகாரர்களால் பிரித்து வைக்கப் பட்டோம்.

தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளின் போலி வேடதாரிகளை ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அடையாளம் கண்டு எனது தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் எழிச்சியோடும், உணர்ச்சியோடும்  செயல்பட்டு வருவதை சகிக்க முடியாத அடிமைகள் கூட்டம் என் வளர்ச்சியைத் தடுப்பதற்காக நினைவு இல்ல நாடகத்தை அரங்கேற்ற எத்தனைக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை அம்மா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக கருதுகிறேன்.

தற்போது மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டம் என் அத்தையை வஞ்சித்த கூட்டம், வஞ்சகர்கள் கூட்டம், ஊழல் கறைபடிந்த  கூட்டம், நினைவு இல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளார்கள்.

அத்தைக்காக  நான் அவர்கள் வழியில்  மக்களுக்காக பணியாற்றுவேன். நானும் என் சகோதரர் தீபக் மட்டும் தான் அனைத்து சொத்துக்களுக்கும் முறையான சட்டப்பூர்வமான வாரிசு.

எங்களிடம் முறையாகவோ சட்டரீதியாகவோ அனுமதி பெறாமல் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது சட்டரீதியான மற்றும் தார்மீக ரீதியான முறைகேடாகும். நான் பிறந்த எனது  தாய் இல்லம் என் அத்தைக்காக இறுதிவரை என்னால் மட்டும் தான் பராமரித்து  அத்தையின் புகழை மேம்படுத்திட உயில் என் அத்தைக்கு சொந்தமான அனைத்து  பூர்வீக சொத்துக்கள் அதனை முறைப்படி பராமரிக்கும் உரிமை முழுமையாக எனக்கும் சகோதரர் தீபக்கும் மட்டும் உள்ளது.

வரும் காலங்களில் முறையாக அதிமுகவின் கோட்டையாக அந்த புனித இல்லத்தை கட்டி காப்பது எனது கடமையாகும்.   தற்போது உள்ள அதிமுக, சசிகலா பினாமி அமைச்சரவைக்கு இந்த நடவடிக்கை எடுக்கும் உரிமை எந்த அடிப்படையில் உள்ளது.  

இதையெல்லாம் முடிவு செய்ய இவர்கள் யார்? இதை மீறி சசிகலா மற்றும் நடராஜன் இந்த கபட நாடகத்தை நிகழ்த்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நான் தயாராக உள்ளேன்.   முதலில் இந்த பினாமி அமைச்சரவை அடிமை ஆட்சி நடத்துவதை நிறுத்திவிட்டு அம்மாவுக்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் கடமையை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி போன்ற சசிகலாவின் கைக்கூலிகள் எங்களுக்கு சொந்தமான தார்மீக உரிமைகளை பறிக்க நினைப்பதை அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.   எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.   அம்மாவிற்கு துரோகம் இழைக்காதீர்கள். இவ்வழக்கில் இருந்து முழுமையாக அவர் இறந்த பிறகு உச்சநீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

அதனால் 100 கோடி அபராதம் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை