சர்வதேச ஆயுத சப்ளை கும்பலுடன் தொடர்புள்ள சந்திரசாமி.. மர்ம சாமியாரின் மறுபக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்வதேச ஆயுத சப்ளை கும்பலுடன் தொடர்புள்ள சந்திரசாமி.. மர்ம சாமியாரின் மறுபக்கம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி இன்று காலமானார். அவருக்கு வயது 66. இவர் பெரும் ஆயுத டீலர் என பெயரெடுத்த மர்ம சாமியாராகும்.

சந்திரசாமியும், தற்போதைய பாஜக எம்.பி. சுப்பிரமணியன்சாமியும் நெருங்கிய நண்பர்களாகும். ராஜிவ் கொலையான தினத்தில் இவர் சென்னையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

சந்திராசாமி வெறும் ஜோசியம் கூறும் சாமியார் என்றும், தாந்த்ரீக வேலைகள் செய்பவர் என்றும்தான் முதலில் அவர் குறித்த அடையாளங்கள் இருந்தன. ஆனால் அவர் அகில உலக அளவில், நேரிடையாகவும், கள்ளத்தனமாகவும் ஆயுத பேர, வியாபாரங்களில் ஈடுபட்ட மிகப்பெரிய புள்ளிகளான அட்னன் கஷொகி என்பவருடன் நெருங்கிய வியாபார தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தவர். ஆயுத பேரங்களில் இவர் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

மற்றொரு ஆயுத தரகர் என்ரி மில்லருடனும் இவருக்கு தொடர்புகள் இருந்ததாக கூறப்படுவதுண்டு. இந்த வகையில் ஆயுதங்களை சப்ளை செய்வதற்காக விடுதலைபுலிகளுடனும் சந்திரசாமி தொடர்பு வைத்திருந்ததாக சில விசாரணை அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

பிறப்பால் சமணரானாலும், சந்திரசாமி, தாந்த்ரீகங்களில் ஈடுபட்டார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமானவர். அவருக்கு ஆன்மீக குருவாக இவர்தான் விளங்கினார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை