10நாட்களில் 10கோடி:அறிமுக நடிகர் படம் சாதனை..!

தினமலர்  தினமலர்
10நாட்களில் 10கோடி:அறிமுக நடிகர் படம் சாதனை..!

என்ன இருக்குன்னு இவனெல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துட்டான்யா” என சில படங்கள் வெளியாகும்போது அந்தப்படத்தில் நடித்த புதுமுக ஹீரோவைப்பற்றி, படம் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகில் இருக்கும் பலரும் பேசுவது வாடிக்கை தான்.. அவ்வளவு ஏன், சம்பந்தப்பட்ட படக்குழுவில் இருக்கும் ஒரு சிலர் கூட ஏளனமாக பேசுவது உண்டு.. 'அமர் அக்பர் அந்தோணி' என்கிற படத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா என மூன்று பெரிய ஹீஎரோக்களை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் நாதிர்ஷா, தனது அடுத்த படமாண 'கட்டப்பனையில் ரித்விக் ரோஷன்' படத்தில் ஹீரோவாக விஷ்ணு உன்னிகிருஷ்ணனை அறிவித்தபோதே பலரும் மேலே கூறியதுபோன்றே கேலி பண்ணினார்கள்..

இவர் டைரக்சனில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் பலர் தயாராக இருக்கும்போது, இவர் இப்படி பண்ணுகிறாரே என இயக்குனர் நாதிர்ஷாவின் காதுபடவே பேசினார்கள்.. ஆனால் இன்று என்ன ஆகியிருக்கு தெரியுமா..? பத்து நாட்களில் பத்து கோடி ரூபாய் வசூலித்து பிரபல நடிகர்களுக்கு இணையான சாதனையை செய்திருக்கிறது இந்தப்படம்.. இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்த படத்தின் கதாசிரியர் உன்னி கிருஷ்ணன், தனக்கேற்ற மாதிரி ஒரு கதையை எழுதியதும் அதை நாதிர்ஷா துணிந்து இயக்கியதும் இதற்கு முக்கிய காரணம்.. படத்தின் இயக்குனர் நாதிர்ஷாவை கேட்டால் கதைதான் என் படத்தின் கதாநாயகன் என்கிறார்.

மூலக்கதை