kings xi punjab beat royal challengers by six wickets

  வலைத்தமிழ்
kings xi punjab beat royal challengers by six wickets

ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 51 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் டேவிட் ஹுசி முதலில் பந்து வீச செய்ய தீர்மானித்தார்.இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 189 ரன்களை எடுத்தது.  பெங்களூர் சார்பில் கெய்ல் 33 பந்துகளில் 61 ரன்களையும்,புஜாரா 48 பந்துகளில் 51 ரன்களையும், டி வில்லர்ஸ் 19 பந்துகளில் 38 ரன்களையும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி டேவிட் மில்லரின் அபார சதத்தால் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்களை எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. 

மூலக்கதை