royal challengers bangalore beat delhi daredevils by 4 runs

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
royal challengers bangalore beat delhi daredevils by 4 runs

ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 57 வது லீக் போட்டியில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ்  அணியும்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்யும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன்  ஜெயவர்தனே பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கெட்டுகளை 4 இழந்து 183 ரன்களை எடுத்தது. பின்னர் 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.

மூலக்கதை