நீண்ட தூர பயணம்:எமிரேட்சை பின்தள்ளி ஏர் இந்தியா சாதனை

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
நீண்ட தூர பயணம்:எமிரேட்சை பின்தள்ளி ஏர் இந்தியா சாதனை

ஏர் இந்திய நிறுவனம், நீண்ட தூரம், இடைநில்லா விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளது. அட்லாண்டிக் கடல் வழியாக விமானத்தை இயக்காமல் பசிபிக் கடல் வழியாக விமானத்தை இயக்கி இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக 13,900 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, ஏர் இந்தியாவின் இடைநில்லா விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிய முயற்சியாக பசிபிக் பெருங்கடல் வழியிலான 15,300 கிலோ மீட்டர் தூரத்தை 14.5 மணி நேரம் நிற்காமல் இயக்கி ஏர் இந்திய விமானம் சாதனை படைத்துள்ளது.

டில்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு பசிபிக் பெருங்கடல் மார்க்கமாக செல்லும் போது, சுமார் 1500 கி.மீ., தூரம் அதிகரித்து இருந்தாலும் இரண்டு மணி நேர பயண நேரமும், எரிபொருள் தேவையும் குறைந்ததால் தான் இந்த புதிய மார்க்கம் தேர்வு செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக செல்லும் போது, எதிர்க்காற்று வீசுவதால் விமானத்தை குறைந்த வேகத்தில் மட்டுமே இயக்க முடிந்தது என்றும், ஆனால் பசிபிக் பெருங்கடல் மார்க்கத்தில் வீசும் காற்று விமானத்தின் பறக்கும் திறனுக்கு உறுதுணையாக இருப்பதால் பயண நேரமும், எரிபொருள் செலவும் குறைந்துள்ளது என்றும் ஏர் இந்தியா கூறி உள்ளது.

சாதனை படைத்த விமானத்தில், 10 ஊழியர்களுடன் ரஜ்னீஸ் சர்மா, கவுதம் வெர்மா, கான் மற்றும் பலீமர் ஆகியோர் விமானிகளாக பணிபுரிந்தனர். பணிபுரிந்தனர். இதற்கு முன்னர், துபாய்- ஆக்லாந்து இடையிலான எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் 14120 கி.மீ தூர இடைநில்லா பயணமே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை