என் புருஷன் பத்தி எனக்கு தெரியும்: ஐஸ்வர்யா தனுஷ் ஆவேசம்!

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
என் புருஷன் பத்தி எனக்கு தெரியும்: ஐஸ்வர்யா தனுஷ் ஆவேசம்!

நடிகர் தனுஷ் பற்றி தற்போது கிசுகிசுக்கள் அதிகமாக வருகிறது. இவற்றிற்கு அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் பதில் அளித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷை டேட்டிங் கூப்பிட்டது, மச்சினிச்சி சௌந்தர்யா விவாகரத்து, அமலாபால் விவாகரத்து, சோனியா அகர்வால் விவகாரம், விஜய் யேசுதாஸ் மனைவி விவாகரத்து என நடிகர் தனுஷ் குறித்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் றெக்கை கட்டி பறந்தன.

ஆனால் இந்த கிசுகிசுக்களுக்கு நடிகர் தனுஷோ அவரது மனைவி ஐஸ்வர்யாவோ எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து முதல் முறையாக ஐஸ்வர்யா வாய் திறந்து பேசியுள்ளார்.

அதில், என்னுடைய அப்பா ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது அவரை பத்தி வந்த கிசுகிசுக்களை என் அம்மா அமைதியாக இருந்து எதிர்கொண்டார். அது போலவே நான் இருக்க விரும்புகிறேன்.

தனுஷை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மற்றும் நடிப்பு தான். ஒரு செக் கூட அவருக்கு நிரப்ப தெரியாது. அதனால் என் புருஷன் பத்தி எனக்கு தெரியும் என ஆவேசமாக பேசினார் ஐஸ்வர்யா.

மூலக்கதை