போலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
போலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள தானே நகரத்தில் ஒரு போலி கால் சென்டரில் இருந்து அமெரிக்கர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தது அவர்களை ஏமாற்றியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் 750க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், அமெரிக்காவில் வரி செலுத்த தவறியவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்களைப் பெற்று அவர்களை தொடர்பு கொண்டனர் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்

தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று, பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் டாலர்கள் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வரை இந்தியாவில் நடந்த மோசடிகளில் மிகப்பெரிய மோசடி இதுவென்று கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தானே நகர போலிசார் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை( Federal Bureau of Investigation) அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சி எடுத்து வருகின்றனர்.

மூலக்கதை