ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கவுரவம்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கவுரவம்

பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ள ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 7 ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை மெட்ராஸ் மூவிஸ் எனும் நிறுவனம் பெற்றுள்ளது. ரிலீசுக்கு முன்னரே இந்த படம் அதிக எதிர்பார்ப்பையும், சிவகார்த்தியேனின் பெண் வேடம் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

ரஜினி படங்களை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களின் படமும் ஜப்பானில் உள்ள யொகோயமா மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் முதன் முறையாக, ரஜினிக்கு அடுத்து நகோயா எனும் மூன்றாவது பகுதியில் ரெமோ படம் வெளியாகிறது. ரஜினி படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படமே இந்த பகுதியில் வெளியிடப்படுவதால், ரஜினிக்கு பிறகு ஜப்பான் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கௌரவம் வழங்கியதாக கருதப்படுகிறது. ரெமோ படத்தின் ரிலீசுக்கு பிறகு ரஜினியை போன்றே சிவகார்த்திகேயனுக்கும் ஜப்பானில் அதிக ரசிகர்கள் உருவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை