ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: முன்னாள் நீதிபதியின் சர்ச்சை கருத்து!

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: முன்னாள் நீதிபதியின் சர்ச்சை கருத்து!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று பணிக்கு திரும்புவார் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஜெயலலிதாவை தான் ஒரு தலையாக காதலித்ததாக சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அவரது பதிவில், ஜெயலலிதா சிங்கம் போன்ற ஒரு பெண். அவரை எதிர்ப்பவர்கள் குரங்குகள். அவர் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார்.

நான் இளைஞனாக இருந்த போது, ஜெயலலிதா மிகவும் இளமையாக இருப்பார். அவரது கவர்ந்திழுக்கும் அழகால் அவரை நான் காதலித்தேன். ஆனால் அது ஜெயலலிதாவுக்கு தெரியாது. என்னுடைய காதல் என்றுமே மாறாதது.

இப்பொழுதும் அவரது கவரும் அழகை பார்க்க முடிகிறது. இப்பொழுதும் அவரை நான் காதலிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். என மார்கண்டேய கட்ஜூ கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பலரும் கம்மெண்ட் செய்து வந்தனர். இதனால் சர்ச்சை எழவே அவர் தனது பதிவை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.

மூலக்கதை