மங்காத்தா-2 உருவாகுமா?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
மங்காத்தா2 உருவாகுமா?

வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த வெங்கட்பிரபுவுக்கு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கிய பிறகு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்து கிடைத்தது.

அதன்பிறகுதான் அவர் சூர்யா, கார்த்தியை வைத்து படங்கள் இயக்கினார். ஆனால் அப்படி அவர் இயக்கிய படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை வைத்தே தற்போது இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில், இந்த படம் வெளியானதும் அவர் அஜித்தை வைத்து மங்காத்தா-2 வை இயக்க தயாராகிக்கொண்டிருப்பதாகஇணையதளங்களில்செய்திகள்.வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் அதுகுறித்து வெங்கட்பிரபுவைக் கேட்டால், மங்காத்தா-2வை இயக்க நான் இப்போதுகூட ரெடியாக இருக்கிறேன். ஸ்கிரிப்ட்டும் தயாராக உள்ளது. ஆனால், அஜித் சார் தயாராக வேண்டுமே. அவரது அழைப்புக்காகத்தான் காத்திருக்கிறேன். அவர் சொன்னால் மட்டுமே மங்காத்தா-2 உருவாக சாத்தியம் உள்ளது என்கிறார் வெங்கட்பிரபு.

மூலக்கதை